Posts

Showing posts from September, 2019

தளபதியின் சமரசம்

தளபதியின் சமரசம் மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது. இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார். மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார். கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார். கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை மு...

முல்லாவின் உடைவாள்!

முல்லாவின் உடைவாள்! முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும். முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார். அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா? என்று கேட்டார். ” கள்வன் என்னை என்ன செய்வான்? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ?” என்றார் முல்லா. ” கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும்?” என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார். அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார். ” நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே?” எனக் கவலையுடன் கூறினார் முல்ல...

செயற்கரிய சாதனை

செயற்கரிய சாதனை ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ” முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?” என்று கேட்டான். ” மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்” என்றார் முல்லா. ” அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?” என்று முரடன் கேட்டான். ” உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழச்சியுடன் சிரித்தார். ” என்ன சிரிக்கிறீர் ” என்று முரடன் கேட்டான். ” அன்பரே, உமது கைவாள் எனது த...

முல்லாவின் புத்திசாலித்தனம்!

முல்லாவின் புத்திசாலித்தனம்! ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். ” நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?” என்று கேட்டார் அவர். ” கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் ” என்றார் முல்லா. அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார். ” கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம்? ஒவ்வொரு பொருளையும் வாங்க ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச் செய்யாதே” என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார். ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார். முல்லா விரைந்து சென்றார். சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய...

எல்லோரும் சோம்பேறிகள்!

எல்லோரும் சோம்பேறிகள்! சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார். மக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். ” அன்பார்ந்த நண்பர்களே? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் ” என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று. ” நண்பர்களே! கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம்? நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனைபேர்? அவர்கள் மட்டும் கைதூக்குங்கள் ” என்றார் முல்லா. அநேகமாக அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள். ” முல்லா உழைக்காமல் சுகபோக வாழ்வு வாழ என்ன வழி? தயவு செய்து கூறுங்கள்?” என்று மக்கள் கூச்சலிட்டனர். முல்லா தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். ...

பிரார்த்தனை

பிரார்த்தனை ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை. உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன. கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்து விடுவதாக ஒருவர் சொன்னார். மற்றொரு பிரயாணி தாம் உயிர் பிழைத்தால் ஆயிரம் ஏழை மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இவ்வாறு ஒவ்வொரு பிரயாணியும் தம்மிடமிருக்கம் விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்து விடுவதாக வாக்குறுதிகள் தந்தனர். இந்தக் காட்சிகளையெல்லாம் ஒருபக்கமாக நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா. திடீரென்று அவர் அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம் என்று கூவினார். பிரயாணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் சேர்ந்து ஆனந்தக் கூத்தாட...

மகிழ்ச்சியின் எல்லை

மகிழ்ச்சியின் எல்லை முல்லாவின் வீட்டிற்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது. அவனிடம் ஏராளமான பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன. ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. முல்லாவை சந்திக்கும் போதெல்லாம், ” என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது. நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை கூறக் கூடாதா?” என்று பரிதாபமாகக் கேட்டார். செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறுசிறு மூட்டைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து வைப்பான். முல்லா அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம். அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார். அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து விட்டு வைத்...

சந்தேகப்பிராணி

சந்தேகப்பிராணி வியாபரத்தை முன்னிட்டு ஒரு தடவை முல்லா பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்கத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுக்கு எடுத்தற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது. அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில் மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்? தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான் இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான். அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்ற தங்கினார். அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள். ” காலையில் நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது? முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் என்ற பரிதாபமாகக் கேட்டான் ” சந்தேகப் பிராணி. முல்லா சிரித்துக் கொண்டே ” நண்பரே கவலைப்படாதீர். ஒரு கருப்புத் துணியை உமது ஒரு காலில் சுற...

முல்லா வசூலிக்கும் கடன்

முல்லா வசூலிக்கும் கடன் முல்லா ஒருநாள் ஒரு பெரிய பணக்காரிடம் சென்றார் ஒரு மனிதனுடைய கஷ்ட நிலையைக் கண்டு மனம் பொறாமல் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு மனிதரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கி விட்டான். கடன் வட்டிக்கு வட்டியாக பல மடங்கு பெரிய தொகையாக வளர்ந்து விட்டது. அந்தக் கடனைக் கொடுக்க முடியாமல் அவன் மிகவும் சங்கடப்படுகிறான். கடன் தொல்லை தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்து கொள்வானோ என்று கூட எனக்கு அச்சமாக இருக்கின்றது. அந்த மனிதனின் கடனை அடைக்க ஒரு ஆயிரம் பொற்காசுகள் இருந்தால் கொடுங்;கள். உரிய காலத்தில் உங்கள் தொகையை அவன் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று முல்லா மிகவும் உருக்கமாக கூறினார். அதைக் கேட்டு மனமுருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து ” அவ்வளவு கஷ்ப்படும் மனிதன் யார்?” என்று கேட்டார். ” வேறு யாருமில்லை, நான்தான் ” என்று கூறிச் சிரித்தவாறு முல்லா சென்று விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்து செல்வந்தரிடம் வாங்கிய பணத்தை முல்லா திருப்பித் கொடுத்து விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்த பிறகு ஒரு நாள் ...

எதிர்கால வாழ்க்கை

எதிர்கால வாழ்க்கை ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜPவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். ” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார். ” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு. ” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை. ” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான். முல்லா சுற...

யானைக்கு வந்த திருமண ஆசை

யானைக்கு வந்த திருமண ஆசை மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்;லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி ” நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்” என்றார். ” ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்” என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள். நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போ...

கழுதையால் கிடைத்த பாடம்

கழுதையால் கிடைத்த பாடம் ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார். ” முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் ” என்றார் நண்பர். அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத் தரவில்லை. தவிரவும் கழதைக்கு சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார். அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார். நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார். நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது. ” முல்லா அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே” என்ற நண்பர் வியப்புடன் கேட்டார். முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது. ” நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீ...

சூரியனா-சந்திரனா

சூரியனா-சந்திரனா அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது. அவர் உடனே எழுந்து ” அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா?” என்று கேட்டார். இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம். முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால்தான் உலத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன் என்றார் முல்லா. அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர். பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான ஒளியை இரவிலே அள...

பதிலுக்குப் பதில்

பதிலுக்குப் பதில் ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார். பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார். அந்தக் கடையில் அழகான சால்வைகளும் விற்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர் கடைக்காரனைப் பார்த்து இந்தப் தலைப்பாகைகை;குப் பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது? என்றார். உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா. அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்க...

புதுப்பானை

 புதுப்பானை முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒருநாள் புதுப்பானை ஒன்றை வாங்கி வந்தார். ” பையா! இந்தப் பானையை எடுத்து கொண்டு கிணற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா”  எனக் கூறினார். பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் புறப்பட்டான். முல்லா சற்று தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார். பையன் திரும்பி வந்து, ” என்ன எஜமானே” என்று கேட்டான். இந்தப் பானை புத்தம் புதியது. அதிகப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாகக் கையாண்டு உடைத்தாயானால் அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஒங்கி அறைந்தார். பையன் திடுக்கிட்டுத் திரும்பி, ” எஜமானே, பானையை உடைத்தால்தானே அடி கொடுப்பேன் என்று கூறினீர்கள். நான் பானையை உடைக்கவில்லையே என்னை எதற்காக அடித்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு முல்லா, ” பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன் உடைந்து போன பானை திரும்பியா வரும்? அதற்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்தேன். இந்த அடியை நினைவில் வைத்தக் கொண்டு நீ பானை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாய்...

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?” என ஒரு சந்தேகத்தைக் கேட்டார். நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா. உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான். பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார். ...

குழப்பவாதிகள்

 குழப்பவாதிகள் முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள். உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார். அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, ” இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?…ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார். இது என்னடா வம்பா போச்சு, ...

முல்லாவும் மூன்று அறிஞர்களும்

முல்லாவும் மூன்று அறிஞர்களும் நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும். ஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள். அப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை, உடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா? எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா? ஹா ஹா,...

கோழியால் வந்த குழப்பம்

கோழியால் வந்த குழப்பம் ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்…. இந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிரிக்கிறாய்? நண்பா! நீ செய்வது தொழுகை அல்ல….அதனால் சிரிக்கிறேன் என்ன சொல்லுகிறாய்? தொழுகை இல்லையா? ஆமாம் உன்னுள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை முல்லாவின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய் நின்றார். நீதிபதி அவர்களே! இந்த ஆள் நாங்கள் தொழுகிற வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் அதுமட்டுமல்ல வழிபாடு செய்கிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரணதண்டனை வழங்க வேண்டும். நீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார். நிங்கள் சிரித்தது உண்மையா? உண்மைதான் ஏன் சிரித்தீர்கள்?அவர் செய்தது பிரார்த்தனை அல்ல….அதனால் சிரித்தேன் அப்படியா ஆமாம்…அவரை நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். கேளுங்கள் முல்லா வந்து மு...